உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

வைத்தியசாலைக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விலைமனுக்கோரல்; இலஞ்சம் பெற்ற இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
111 பார்வைகள்

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு 2027 ஆம் ஆண்டிற்கான உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விலைமனுக்கோரல் தொடர்பான விவகாரத்தில், 20 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியமை, பெற்றுக் கொண்டமை மற்றும் அதற்குத் தூண்டுதலாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தொழிலதிபர் ஒருவர் உட்பட இருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நேற்று திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டாளரின் தந்தை மற்றும் மாமாவின் பெயர்களில் புதிய டெண்டர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்த்து, 2027 ஆம் ஆண்டிற்கான டெண்டர் முறைப்பாட்டாளருக்கே கிடைப்பதை உறுதி செய்வதற்காக, சந்தேகநபர்கள் ஆரம்பத்தில் 30 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பின்னர் இந்த இலஞ்சத் தொகை 25 இலட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டு, இறுதியில் 20 இலட்சம் ரூபாயாக பேசி முடிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதனடிப்படையில், கம்பளை அஞ்சல் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்து 20 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டபோது கம்பளைப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் மற்றுமொரு நபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

63 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

52 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

74 0 0