உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

திருக்கோவிலில் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
69 பார்வைகள்

திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் தம்பட்டை 02 ல் உள்ள நெற்களஞ்சியசாலையில் அரசாங்கத்தின் 2026 சிறுபோக நெல் கொள்முதல் வேலைத்திட்டம் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இவ் சிறுபோக நெல் கொள்முதல் வேலைத்திட்டத்திற்கு பிரதம அதிதியாக கரையோர பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ.A.ஆதம்பாவா மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் திரு. அனுபமா மங்கள விக்ரமராச்சி கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

இவ் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் திரு.ம.கேந்திரமூர்த்தி, திருக்கோவில் பிரதேச சபை உதவி தவிசாளர் கௌரவ S.கமல்ராஜன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் திரு பா.சுதாகரன் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் விவசாய அமைப்பின் அங்கத்தவர்கள் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

132 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

115 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

112 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0