உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

சமிந்த விஜேசிறிக்கு சிறைத்தண்டனை.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
71 பார்வைகள்

இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் அவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில், பண்டாரவளை நகர சுற்றுவட்டத்திற்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உள்ளிட்டோர் ஜீப் ரக வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனத்தை பொலிஸ் ஜீப் ஒன்று முந்திச் சென்றதாகவும், இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, அவர்களைத் தடுத்து வைத்தமை மற்றும் உடல் ரீதியான தீங்கு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

குற்றம் சாட்டப்பட்டவர்களான சமிந்த விஜேசிறி மற்றும் அவரது சாரதி பந்துல ரத்நாயக்க ஆகியோர் 4 குற்றச்சாட்டுகளிலும், அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரியான ரசிக கருணாதிலக்க 3 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டனர். இருப்பினும், ஓட்டுநர் பந்துல ரத்நாயக்க உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டுகளில் சமிந்த விஜேசிறி குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை மேல் நீதிமன்றம் அவருக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

76 0 0