உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய கொடியேற்றம்.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
37 பார்வைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்திற்கான கொடியேற்றம் நேற்று (26) ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் இடம்பெற்றது.

சிவபூமி என திருமூலரால் போற்றப்பட்ட இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் வங்கக்கடலோரம் வீற்றிருந்து நாடிவரும் அடியவர்களின் குறைநிறைகளை தீர்த்து வேண்டும் செல்வத்தை வாரிவழங்கும் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் நேற்று 26 ஆம் திகதி இடம்பெற்றதுடன் தொடர்ந்து 15 நாட்கள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு தமிழ்ப் பிரதேச மக்களது திருவிழாவோடும் இடம்பெற்று ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் தீர்த்தோற்சவம், கொடியிறக்கம், பூங்காவனம் மற்றும் வைரவர் பூஜையுடன் நிறைவுறவுள்ளது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் சகிதம் கொடிச்சீலை ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து ஆலயத்தில் மூலமூர்த்திக்கான பூஜை இடம்பெற்றதுடன் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு விசேட அலங்கார பூஜை நடைபெற்றதன் பின்னர் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் அடியார்களினால் வீதி வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பத்தின் அருகே அமர்த்தப்பட்டார்.

கொடித்தம்பம் அருகே இடம்பெற்ற பூஜைகளின் பின்பு நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

ஆலயத்தலைவர் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற ஆடி அமாவாசை உற்சவம் சிவாகம வித்தியா பூசணம் சிவாச்சாரிய திலகம் ஜோதிட வித்தியா தத்துவநிதி விபுலமணி சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதக்கருக்கள் ஆகியோரால் நடாத்தப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

இரு பெண்களின் சடலங்கள் மீட்பு.!

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட இரு பெண்களின் சடலங்கள் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக கையளிக்கப்பட்டதாக பொலிஸார்…

91 0 0
அம்பாறை செய்திகள்

நிதியறிவு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பாரிய நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பொலிஸ் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து…

47 0 0
அம்பாறை செய்திகள்

வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய கார்.!

அம்பாறை மாவட்டம் இறக்காமம் – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று திங்கட்கிழமை (20) இரவு…

58 0 0
அம்பாறை செய்திகள்

இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை; ஒருவர் கைது.!

அம்பாறை மாவட்டம் இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரகஹகெலே பகுதியில் நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் பெருந்தொகை போதைப்பொருள் மற்றும் பணத்துடன்…

101 0 0