உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

அனோஜனைக் காப்பாற்ற பிரதி சபாநாயகர் தலைமையிலான குழு சவூதி பயணம்! – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

இலங்கை செய்திகள் 39 நிமிடங்கள் முன்
25 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றும் பொருட்டு, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் அரச மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுவொன்றைச் சவூதி அரேபியாவுக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றையொன்றை முன்வைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரும் ஜனாதிபதியின் பிரத்தியேகக் கடிதத்தைச் சவூதி அரசருக்கு நேரில் கையளிப்பதற்காகவே இந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழு சவூதி அரேபியா செல்லவுள்ளது.

அடுத்த வாரம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின்போது சவூதி வெளிவிவகார அமைச்சரைத் தாம் நேரில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், அப்போது பொதுமன்னிப்பு வழங்குதல், தண்டனையைக் குறைத்தல் அல்லது ஏதேனும் நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் தீவிரமாக வலியுறுத்தவுள்ளதாகவும் கூறினார்.

இந்தச் சம்பவத்தில் சட்டபூர்வமான தலையீடுகளை மேற்கொள்வதற்கும், அங்குள்ள சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் தங்களது சொந்தச் செலவில் சவூதி அரேபியா செல்ல ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபைக்கும் காத்தான்குடி நகரசபைக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் பொலீசாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினால் வருமான வரி அறவீடுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கு இடையே இன்றைய தினம் ஏற்பட்ட முறுகல் நிலையானது காத்தான்குடி…

15 0 0
இலங்கை செய்திகள்

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் எல்லை மீறிய கட்டுமானங்களுக்கு தடை.!

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தேவையற்ற புதிய கட்டுமானப் பணிகளுக்கு எதிராகத்…

18 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் தொடர்பான அவதூறு கருத்துக்களை எதிர்த்து வழக்குத் தாக்கல்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும், அவருக்கு எதிராக வெளியாக்கப்பட்ட அவதூறான மற்றும் சமூக மோதலைத்…

26 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 15 பேர் குற்றவாளிகள்.!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24…

26 0 0