உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

அனோஜனின் விடுதலைக்காக சிறப்பு இறை பிரார்த்தனை

இலங்கை செய்திகள் 50 நிமிடங்கள் முன்
32 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக மீட்டு வர வலியுறுத்தி, காரைதீவில் சிறப்பு இறை பிரார்த்தனை (இறைமன்றாட்டம்) நிகழ்வு இன்று (22) மாலை நடைபெற்றது.

“எம் மண்ணின் மைந்தனை மீட்டிட கை கோர்ப்போம் வாரீர்” எனும் உணர்வுப்பூர்வமான அழைப்பின்கீழ், காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் 2001 O/L மற்றும் 2004 A/L (JALU) கல்விப் பிரிவு நண்பர்கள் குழுவினால் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இப் பிரார்த்தனை நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்துகொண்டு, அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி அவரை உயிருடன் நாட்டிற்கு மீட்டு வருவதற்குச் சவூதி அரசுக்கும் இலங்கை அரசுக்கும் ஆதரவாகத் தீபமேந்தி இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபைக்கும் காத்தான்குடி நகரசபைக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் பொலீசாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினால் வருமான வரி அறவீடுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கு இடையே இன்றைய தினம் ஏற்பட்ட முறுகல் நிலையானது காத்தான்குடி…

19 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற பிரதி சபாநாயகர் தலைமையிலான குழு சவூதி பயணம்! – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றும் பொருட்டு, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் அரச மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அடங்கிய…

29 0 0
இலங்கை செய்திகள்

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் எல்லை மீறிய கட்டுமானங்களுக்கு தடை.!

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தேவையற்ற புதிய கட்டுமானப் பணிகளுக்கு எதிராகத்…

21 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் தொடர்பான அவதூறு கருத்துக்களை எதிர்த்து வழக்குத் தாக்கல்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும், அவருக்கு எதிராக வெளியாக்கப்பட்ட அவதூறான மற்றும் சமூக மோதலைத்…

29 0 0