உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
87 பார்வைகள்

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், இரு நாள் விவாதத்தைத் தொடர்ந்து, இம்மாதம் 25 ஆம் திகதி இது குறித்த வாக்கெடுப்பை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் அரசாங்கம் பின்பற்றியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்கேற்ப உச்ச நீதிமன்றம் தனது முடிவை இன்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த முடிவுக்கு எதிராகப் போராட எந்தவொரு கட்சிக்கும் உரிமை இருந்தாலும், அத்தகைய போராட்டங்கள் அல்லது கிளர்ச்சிகளின் அடிப்படையில் பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

163 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

152 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

142 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

139 0 0