உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மன்னாரில் தமிழ்த் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
118 பார்வைகள்


நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது  1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 23ஆம்  திகதி   கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப் படுகொலை  நினைவேந்தல் வாரத்தின் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகளையும் பல்லாயிரக் கணக்கான பொது மக்களையும் நினைவுகூரும்  நிகழ்வு  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) மன்னார் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்றது.

43 ஆம் ஆண்டு  தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் தமிழீழ விடுதலை இயக்கம்  ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள  கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

  கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், மன்னார் நகர முதல்வருமான டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள்,முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதன் போது   குட்டிமணி, தங்கத்துரை  உள்ளடங்களாக  53 அரசியல் கைதிகளுக்கும்,பொது மக்களுக்குமான  நினைவேந்தல் இடம் பெற்றது.

இதன் போது   குட்டிமணி, தங்கத்துரை ஆகிய  இருவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும்   படுகொலை செய்யப்பட்ட  தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0