உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

மூத்த ஊடகப் படப்பிடிப்பாளர் சுரேந்திரனின் மறைவுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இரங்கல்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
120 பார்வைகள்

மூத்த ஊடகப் புகைப்படப்பிடிப்பாளரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிரேஷ்ட உறுப்பினருமான சண்முகலிங்கம் சுரேந்திரனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் தருகின்றது என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சுமார் 40 வருடங்களுக்கு மேலாகச் சண்முகலிங்கம் சுரேந்திரன் பத்திரிகை ஒன்றின் புகைப்படப் பிடிப்பாளராகக் கடமையாற்றி, அண்மையில் தனது உடல்நிலை காரணமாக ஓய்வுபெற்றிருந்த நிலையிலேயே, தனது 69 ஆவது வயதில் திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

திருகோணமலை, சாம்பல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சுரேந்திரன், கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகக் கொண்டே தனது புகைப்பட ஊடகப் பணியைச் செவ்வனே ஆற்றி வந்தார்.

ஊடகத்துறையில் தன்னை இணைத்துக்கொண்டது முதல் தனது இறுதிமூச்சு வரை ஊடகப் பணியை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தவர். புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் எவ்வாறிருக்க வேண்டும் என்பதற்கு அவர் சிறந்ததொரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

தனது புகைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்த சுரேந்திரன், தான் பணிபுரிந்த ஊடகத்தின் மேம்பாட்டுக்காக அயராது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை முன்னெடுத்தவர். யுத்த காலச் சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால்மிக்க காலகட்டங்களில் கூட ஊடக நேர்மை தவறாமல் அயராது பணியில் ஈடுபட்டார்.

தனது துணிச்சலான, தனித்துவமான புகைப்படப் பணியின் மூலம் தமிழ் ஊடகங்களில் தனிமதிப்பும் தமிழ் மக்களின் மனங்களில் தனி இடமும் பிடித்திருந்த சுரேந்திரனின் மறைவு, தமிழ் ஊடகத்துறைக்கும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக உள்ளது. அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.” – என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில், இலக்கம் 08, நித்தியபுரி, மூன்றாம் கட்டை, திருகோணமலை என்ற முகவரியில் நடைபெற்று, சாம்பல்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

34 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0