உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசை ஒருநாள் வீட்டுக்கு அனுப்பியே தீருவோம்!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
100 பார்வைகள்

விவசாயிகளை இழிவுபடுத்தும் தற்போதைய அரசை ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்போவது விவசாயிகள்தான் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்டம், மிஹிந்தலை தேர்தல் தொகுதி, நாச்சியாதீவு பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று நெற்செய்கை உள்ளிட்ட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

பல சவால்கள் மற்றும் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் இவர்கள், பிள்ளைகளின் கல்விக்குக் கூட வலுவூட்ட முடியாதவாறு தற்போதைய அரசு விவசாயத்தை அழிக்கும் கொள்கையில் ஈடுபட்டுள்ளது.

நகைநட்டுக்களை அடகு வைத்து, வட்டிக்குப் பணம் பெற்று விவசாயத்தைத் தொடங்கினாலும், இன்று விவசாயத்துக்குத் தேவையான தரமான விதைநெல் இல்லை.

உரிய நேரத்தில் உர மானியமும் கிடைப்பதில்லை. கிடைக்கும் உரமும் தரமற்றதாகக் காணப்படுகின்றது. விவசாய இரசாயனங்கள், உரம் மற்றும் விவசாய உபகரணங்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

விவசாயியை இவர்கள் கடவுள் என்று கூறினாலும், விவசாய உபகரணங்களுக்கு அரசாங்கம் வற் வரியை விதித்து வருகின்றது.

யானை – மனித மோதல் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு மத்தியில் அறுவடை செய்தாலும், அவ்வாறு பெறப்படும் அறுவடைக்கு நியாயமான நிலையான குறிப்பிட்ட விலை கிடைப்பதில்லை.

இன்று ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக விவசாய அமைச்சரே கூறிவிட்டு, நிலையான விலையை 120 ரூபாவாக ஆக்கியுள்ளார்.

இந்த அரசின் அமைச்சர்களுக்குத் தேர்தல் காலத்தில் விவசாயி ராஜாவாகத் தெரிந்தாலும், தேர்தலின் பின்னர் விவசாயிகள் நட்டமடைய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

அன்று 5,000 ரூபா உரம் வேண்டாம் என்று கூறி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக்கி இறுதியில் விவசாயிகள் துயரப்படுகின்றனர். அரசின் திறைசேரியில் பணம் நிரம்பியிருந்தும் உரிய நிவாரணங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

விவசாயியை கடவுள் என்று கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டு, இன்று விவசாயியைக் ‘கசிப்புக்காரன்’ என அரசு கூறி வருகின்றது.

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி அங்கு வேலையின்றி அவதியுறும் இளைஞர்களைக் ‘கரையான்கள்’ என அழைத்தமையால், இளைஞர்கள் ஒன்றிணைந்து கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை ஆரம்பித்து மேற்கொண்ட புரட்சி புதுடில்லி வரை வந்த காரணத்தால் இந்தியக் கல்வி அமைச்சர் இராஜிநாமா செய்துள்ளதைப் போல், நமது நாட்டு விவசாயிகளை ‘கசிப்புக்காரன்’ என அழைக்கும், செயற்கை விவசாயிகள் என அவமதிக்கும் இந்த அரசின் முடிவை இந்த விவசாய சமூகமே ஒருநாள் தீர்மானிக்கும்.

இன்று நெற்களஞ்சியங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியால் நிறைந்துபோயுள்ளன. நிலையான விலையைப் பேணிப் பாதுகாப்பதற்கு நுண், சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டும்.

இன்று அவர்கள் கடன் செலுத்தாதோர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தச் சிறிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறிய இந்த அரசு வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்து இங்குள்ள களஞ்சியங்களை நிரப்பியுள்ளது.

பெலவத்த கட்சி அலுவலகமே இன்று அரசின் சகல பதவிகளையும் தீர்மானித்து வருகின்றது. இன்று விவசாய அமைச்சரால் விவசாயிகளைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் ஆரம்பம் முதலே விவசாய சங்கங்கள், இளைஞர் கழகங்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான உறுப்புரிமைகள் மற்றும் பதவிகள் என சகலதையும் பெலவத்த கட்சி அலுவலகத்திலிருந்தே தீர்மானித்து வந்தனர். எல்லாவற்றையும் பெலவத்த அரசியலுக்கு உட்படுத்தவே இந்த அரசு முற்பட்டு வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் விவசாயிகளை நவீன தொழில்நுட்பத்தால் வலுப்படுத்தி, சிறிய பரப்பளவிலான காணியிலிருந்து அதிக அறுவடையைப் பெறத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், நியாயமான விலையில் மூலதனத்தையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

அன்று ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் விவசாயக் கடன் வழங்கப்பட்ட போதிலும், இப்போது அந்தக்கடன் வசதிகள் வழங்கப்படுவதில்லை. கிராமத்திலுள்ள வட்டி வியாபாரிகளே இன்று விவசாயக் கடன்களை வழங்கி வருகின்றனர்.

ஆகவே, சொந்த காலில் நின்று விவசாயத்தை மேற்கொள்ள மூலதனத்தையும் நிதிசார் பக்கபலத்தையும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றும் கூட விவசாயிக்காக ஐக்கிய மக்கள் சக்தியே தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்காகவும், விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நிலையான விலைக்காகவும் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது. அதனால்தான் இன்றும் மக்கள் தமது பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவரிடம் முன்வைத்து வருகின்றனர்.

அதிகாரம் இல்லாவிட்டாலும் இன்றும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு மக்களுக்குச் சேவை செய்வது ஐக்கிய மக்கள் சக்தியே.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0