உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான 2 நாள் ஊடகச் சுற்றுலா!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
56 பார்வைகள்

மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டும், சிலோன் மீடியா போரத்தின் (Ceylon Media Forum) 7ஆம் ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் முகமாகவும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான விசேட இரு நாள் ஊடகச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய இந்தச் சுற்றுலா எதிர்வரும் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாடும், இரு நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை (25) சிலோன் மீடியா போரம் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில், மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இருநாள் ஊடகச் சுற்றுலாவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். றிஸ்வான் மற்றும் சிலோன் மீடியா போரம் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் ஆகியோர் உத்தியோகபூர்வமாக கையெழுத்திட்டனர்.

மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இச்சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கொழும்பு சென்று வருவதற்காக 50% தள்ளுபடி கிப்ட் வவுச்சர்கள் (Gift Voucher) வழங்கப்படவுள்ளன. இதற்கான அறிமுக விழாவும் இதன்போது நடைபெற்றது.

அடையாளச் சின்னங்கள் அறிமுகம்:

இந்நிறுவனத்தின் அனுசரணையுடன் அச்சிடப்பட்ட தொப்பிகள் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

மாஸ்டர் பிரிண்டர்ஸ் (Master Printers) நிறுவனத்தின் அனுசரணையில் ஊடகவியலாளர்களுக்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் அதிதிகளுக்கு வழங்கப்படவுள்ள ‘டிராவல் மக்’ (Travel Mug) என்பவற்றை சமாதான ஊடக அமைப்பின் தலைவரும், மாஸ்டர் பிரிண்டர்ஸ் உரிமையாளருமான எம்.எம். ஜெஸ்மின் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மற்றுமொரு முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். அம்ஜத், சிலோன் மீடியா போரம் செயலாளர் நூருல் ஹூதா உமர், பொருளாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், உப தலைவர்களான எஸ். தஸ்தகீர், எம்.எம். ஜபீர், செயற்குழு உறுப்பினர்களான எஸ். ஜனூஸ், ஏ. றாஜிட், ஹிசாம் ஏ. பாவா மற்றும் ஊடகவியலாளர்களான எம்.எம். ஷினாஸ், பாறூக் ஷிஹான், எம். தாரிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த இரு நாள் ஊடகச் சுற்றுப்பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தியடைந்து தயார் நிலையில் உள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0