வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஊட்டச்சத்துத் தொடர்பில் விழிப்புணர்வு வேலைத்திட்டம்
வேர்ல்ட் விஷன் (World Vision) நிறுவனத்தின் ஏற்பாட்டில், “நல்ல ஊட்டச்சத்து அனைவரின் பொறுப்பாகும்: பள்ளிகளிலிருந்து குடும்பங்கள் வரை, குடும்பங்களிலிருந்து சமூகங்கள் வரை” எனும் பிரதான தொனிப்பொருளின் கீழ் மற்றுமொரு மிகச் சிறந்த விழிப்புணர்வு வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை வேல்ட் விஷன் நிறுவனத்தினால் சிறுவர்கள் மற்றும் குடும்பங்களின் உகந்த ஊட்டச்சத்தை உறுதி செய்வதையும், வன்முறையற்ற ஆரோக்கியமான எதிர்காலத்தை இணைந்து கட்டியெழுப்புவதையும் நோக்கமாக்கக் கொண்டு, தலவாக்கலை நகரில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதி நாடகம் மற்றும் ஸ்டிக்கர் பிரச்சார நடவடிக்கை world vision நிறுவனத்தின் அதிகாரி ஷிகா சமரத்துங்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
குழந்தைகளின் பசியைப்போக்கி, அவர்களுக்குச் சமநிலையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்வதையும், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த இயக்கம் நகர்த்தப்பட்டுள்ளது.
1000+ கையெழுத்துகள்:இந்நிகழ்வின் மிகப்பெரிய விசேஷ அம்சமாக, 1000 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கையெழுத்திட்டு தங்களது பேராதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரிகள், மருத்துவ பரிசோதகர்கள், அரசு உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கையெழுத்துகள் மூலம் ஆதரவை நல்கினர்.
பாடசாலை மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணிக்கு அமோக வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் ‘மெராயா தமிழ் மகா வித்தியாலய குழுவினரின் சிறப்பு வீதி நாடகம் இடம்பெற்றது.
1.சமநிலையான உணவு உள்ளூரில் கிடைக்கக்கூடிய சத்தான உணவுகளைத் தினமும் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் வழங்குவதை ஊக்குவித்தல்.
- உரிமையும் எதிர்காலமும் ஊட்டச்சத்து என்பது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. ஆரோக்கியமான குழந்தைகளே ஒளிமயமான எதிர்காலத்தின் அடித்தளம்.
- சமூகப் பொறுப்பு ஊட்டச்சத்து சார்ந்த விழிப்புணர்வு வீட்டிலும் சமூகத்திலும் தொடங்க வேண்டும். அறிவு, கொள்கை மற்றும் நடைமுறைகளை ஒன்றிணைத்து ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்குதல்.
முக்கிய செய்தி “இன்றைய செயல்பாடு, நாளைய ஆரோக்கியத்தை உருவாக்கும்; பசியில்லாத எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!”
அரசு & சுகாதாரத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள், மருத்துவ பரிசோதகர்கள், அரசு உத்தியோகத்தர்கள். |
மக்கள் பிரதிநிதிகள் தலவாக்கலை நகர சபை நகர பிதா மற்றும் உறுப்பினர்கள், கொட்டகலை மற்றும் அகரபத்தனை பிரதேச சபை தவிசாளர்கள், மக்கள் பிரதிநிதிகள்.
அமைப்புகள் & பொதுமக்கள் வர்த்தகர்கள், சிறுவர் மற்றும் இளைஞர் சங்கங்கள், ஹார்ட்ரீம், சென் ஹோம்ஸ், என்போல்ட் அமைப்புகள், மற்றும் அக்ரகந்த பெருந்தோட்ட மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.