உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

இன்று அதிகாலை கோர விபத்தில் சிக்கியது தொலைதூரப் பேருந்து!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
150 பார்வைகள்

கொழும்பிலிருந்து கல்முனை சென்ற பஸ் தன்னாமுனையில் விபத்து –  கடைகள் சேதம், பயணிகள் படுகாயம்!

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்று மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில், தன்னாமுனைப் பகுதியில் இன்று (26.07.2026)ஆம் திகதி  அதிகாலை பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிகாலை 04.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாதையை விட்டு விலகி, வீதியோரத்திலிருந்த கடைகளுடன் பலமாக மோதியுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கமே இவ்விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தின் போது பேருந்துக்கும், அருகிலிருந்த கடைகளுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் எதுவும் நிகழவில்லை. பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்.!

நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க…

84 0 0
இலங்கை செய்திகள்

முகநூல் களியாட்ட நிகழ்வு; 41 பேர் கைது.!

தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட முகநூல் களியாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைத்து 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ்…

80 0 0
இலங்கை செய்திகள்

தந்தையை கொ*லை செய்த மகன்.!

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார். இருவருக்கும்…

84 0 0
இலங்கை செய்திகள்

செவ்வாயன்று கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார்…

57 0 0