உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
26 ஞாயிறு

ஆட்சியைத் தக்கவைக்க தினந்தோறும் மக்களை ஏமாற்றும் என்.பி.பி. அரசு.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
88 பார்வைகள்

திசைகாட்டி அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்றும், தற்போது ஆட்சியைத் தக்கவைக்கத் தினமும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

டித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதாகக் கூறிவிட்டு, அரசினர் நிவாரணம் வழங்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமூக வலைத்தளங்களில் படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஹொரவ்பொத்தானை, வகொல்லாகொட போதிரூக்காராம மகா விகாரையில் தர்ம போதனை மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வின்போது ரூபா 2 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான 100 சீமெந்து பொதிகளையும் அவர் அன்பளிப்பாக வழங்கினார்.

விவசாயிகளை “கடவுள்” என்றும், நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை தருவதாகக் கூறியவர்கள், இன்று விவசாயிகளைப் பார்த்து “கசிப்புக்காரன்” என்று அவமதிக்கின்றனர் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

நெல் கிலோ ஒன்றுக்கு 137 ரூபாய் செலவாகும் என விவசாய அமைச்சரே கூறிய போதிலும், 120 ரூபாய் விலையே வழங்கப்படுவதால் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 17 ரூபாய் நட்டம் ஏற்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அரசுக்குச் சொந்தமான நெல் களஞ்சியங்கள் வெளிநாட்டு அரிசியால் நிரப்பப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழ் – முஸ்லிம் பேரவை கூட்டணியின் பிரதிநிதியாக இராதாகிருஷ்ணன் பெயரீடு.!

தமிழ் – முஸ்லிம் பேரவையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இடம்பெறுவார் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்…

22 0 0
இலங்கை செய்திகள்

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ள அச்சங்கம், நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய…

21 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு.!

பெல்லன்வில பகுதியில் இன்று (25) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான நபர், களுபோவில வைத்தியசாலையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; அப்பகுதியில் பரபரப்பு.!

கிளிநொச்சி, அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF)…

46 0 0