சசி தரூரும் திலித் ஜயவீரவும் கொழும்பில் விசேட சந்திப்பு.!
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சசி தரூருக்கும், சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

