உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கறுப்பு ஜூலை படுகொ*லைகளுக்குப் பொறுப்பானவர்கள் சிறைக்கைதிகளின் உரிமை பற்றிப் பேசுகின்றார்கள்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
97 பார்வைகள்

“இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு கறுப்புப் புள்ளியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றுக் காலம் முதல் இந்த ஜூலை மாதம்தான் பல படுகொலைகள் இடம்பெற்றன. அந்தச் சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள்தான் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றி பேசுகின்றார்கள். குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள்.” – இவ்வாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் மிகவும் கவலைக்குரியது, துரதிர்ஷ்டவசமானது. இதனை அரசு எப்போதுமே அலட்சியப்படுத்தவில்லை. முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலே இந்த மோதலுக்கும் உயிரிழப்புக்கும் காரணம் எனக் கூற முடியாது. சிறைச்சாலை மறுசீரமைப்பை ஒரே இரவில் முன்னெடுத்துவிட முடியாது. எனினும், கட்டமைப்பில் காணப்படும் நெரிசல் மற்றும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் அரச ஆதரவுடன் திட்டமிட்ட வகையில் சிறைச்சாலைகளில் மோதல்கள் உருவாக்கப்பட்டு, அரசியல் நோக்கத்துக்காகச் சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர். 2022ஆம் ஆண்டில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரே சிறைச்சாலைக்குள் சென்று கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த கலாசாரமே அன்று காணப்பட்டது. ஆனால், தற்போதைய ஆட்சியில் அவ்வாறான நிலை கிடையாது.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் சிறைச்சாலை நெரிசல் பிரச்சினை தோற்றம் பெற்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சியினர் பேசுகின்றனர். குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது குறைந்தபட்சமாவது நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0