உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

இன்று இடம்பெற்ற கோர விபத்து.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
102 பார்வைகள்

அனுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் ஸ்ராவஸ்திபுர துருலிய சேவன அருகில், காட்டு யானையுடன் வான் ஒன்று மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

பாதுக்கப் பகுதியில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று அனுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, திடீரென வீதியைக் கடந்து சென்ற காட்டு யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பகுதியில் மனித – யானை மோதல் என்பது இன்று நேற்று உருவான பிரச்சினை அல்ல என்றும், கடந்த 18 வருடங்களாக இது தொடர்ந்தும் நீடித்து வருகின்றது என்றும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனினும், இதற்குரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய அதிகாரிகள் நீண்ட காலமாக அசமந்தப் போக்கில் செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முன்பு விவசாயத்தை முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த இந்தப் பகுதி மக்கள், தொடரும் யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக தற்போது விவசாயக் கைத்தொழிலைக் கூடக் கைவிடும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, உயிரிழப்புக்களைத் தவிர்க்கும் வகையில் மனித – யானை மோதலுக்கு உடனடியாக விரைவான தீர்வை வழங்குமாறு கிராம மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

67 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0