உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

கொழும்பில் சீனப் பிரஜைகள் மோதல்; ஒருவர் கடத்தப்பட்டு கொ*லை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
75 பார்வைகள்

கொழும்பு, கோட்டை துறைமுக நகரில் சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரின் சடலம், எஹலியகொடை – கரந்தனை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை கொழும்பு, கோட்டை துறைமுக நகருக்கு மீன்பிடிக்க வந்த மூன்று சீனப் பிரஜைகள் மீது, மற்றொரு சீனப் பிரஜைகள் குழுவினர் தாக்குதல் நடத்தி ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளமையுடன், அவர்களது வேன் வாகனத்தையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். அந்த வேனிலிருந்து வாயுத் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஹலியகொடை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, கரந்தனை – கேட்டுக்கடை காட்டுப் பகுதியில் கல் குவியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம் கண்டெடுக்கப்பட்டு, கொழும்பு துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜையினுடையது என உறுதிப்படுத்தப்பட்டது. சடலம் மேலதிக விசாரணைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சீனப் பிரஜைகள் நாட்டிலிருந்து தப்பியோட முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கரையோரப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறும், இலங்கையில் வசிக்கும் சீனக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சீனத் தூதரகம் இலங்கைப் பொலிஸாருக்குக் கோரிக்கை விடுத்துள்ளதுடன், சீனக் குடிமக்களையும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

36 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0