வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பாரவூர்தி.!
கொழும்பில் இருந்து மஸ்கெலியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றி வந்த பாரவூர்தி நேற்று 22 ஆம் திகதி இரவு 11 மணியளவில் கொழும்பு ஹட்டன் பிரதான சாலையில் மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி மண் திட்டில் மோதியதில் பாரவூர்தியின் சாரதி மற்றும் நடத்துனர் படுகாயங்களுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என ஹட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
