உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மனித உரிமைகளை குறுகிய எல்லைக்குள் முடக்கவே கூடாது.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
59 பார்வைகள்

மனித உரிமைகள் என்பது குறுகிய எல்லைக்குள் வரையறுக்கப்படாமல், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுடன் பொருளாதார, சமூக, மத, கலாச்சார உரிமைகள், காணிக்கான உரிமை, கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான உரிமைகளையும் இணைத்து விரிவான பொருள்கோடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பு JDA Perera கலைக்கூடத்தில் ‘Social Justice Commission’ அமைப்பினால் நடத்தப்பட்ட “Act Now” திட்டத்தின் இரண்டாம் கட்டமான “UNCOVER” புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தக் கண்காட்சியானது, இலங்கையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளைப் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக் கதைகள் ஊடாகப் பார்வையாளர்களுக்கு முன்வைத்துள்ளது. பல்வேறு சமூகக் குழுக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அநீதிகள் குறித்து மக்களின் கவனத்தை ஈர்த்து, உணர்வுபூர்வமான உரையாடலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
“Act Now திட்டத்தின் மூலம் நமது நாட்டில் வெவ்வேறு கால கட்டங்களில் நிகழ்ந்த சமூகத் துன்பியல் சம்பவங்கள் குறித்தும், பல்வேறு பிரதேசங்களில் உரிமைகளை இழந்த மக்களுக்காகவும் முக்கியமான முன்வைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்ட மக்கள், மலையக மக்கள், வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தெற்கில் பல்வேறு துன்பியல் சம்பவங்களால் அழுத்தங்களுக்கு உள்ளான மக்களின் உரிமைகள் ஆகியவற்றை மீண்டும் பேசுபொருளுக்கு உட்படுத்தும் இத்தகைய முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன்.” – என்று தெரிவித்தார்.

மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்குப் புதிய பொருள்கோடல் வழங்கப்பட்டு இந்தப் பரப்பு விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும், இதற்கு நாட்டின் இளைஞர் சமூகம் கைகோர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

2 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0