உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
11 சனி

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

4 பார்வைகள்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை – 4 ஹைராத் ஆற்றங்கரை பகுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை – 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 07 வயதுடைய சிறுவன் ஒருவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்ப உறவினர்களுடன் ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்ற போது சிறுவன் வழி தவறிச் சென்றுள்ளார்.

காணாமல் போன சிறுவனை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சிறுவன் ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; அமைச்சரின் பொறுப்பற்ற தன்மையே உயிரிழப்புக்கு காரணம்.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பொறுப்பான அமைச்சர் சரியான நேரத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்…

23 0 0
இலங்கை செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

நாட்டில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம்…

19 0 0
இலங்கை செய்திகள்

கருத்து, பேச்சு சுதந்திரத்துக்கு அரசாங்கம் ஆப்பு.!

இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

17 0 0
இலங்கை செய்திகள்

திருமலையில் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக்…

15 0 0