உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

என்ன ஆட்டம் போட்டாலும் சுரேஷ் சலே தப்பமுடியாது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்

சிறைச்சாலையிலோ அல்லது வைத்தியசாலையிலோ எத்தகைய நாடகங்களை அரங்கேற்றினாலும், சுரேஷ் சலேவினால் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அவர் செய்த குற்றங்களுக்கான தண்டனையை அவர் கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானியான சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மைகளையும், இரகசியங்களையும் வெளியிடாமல் தொடர்ந்து மறைக்க முற்படுவாரானால், அவர் இரட்டிப்புத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

இது குறித்து ஊடகங்களிடம் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில்,

“சுரேஷ் சலே மட்டுமன்றி, இந்தக் கொடூரத் தாக்குதலுடன் தொடர்புடைய, அதற்குப் பின்னணியில் இருந்த அனைத்து நபர்களுக்கும் நீதிமன்றத்தின் ஊடாக தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். குற்றவாளிகள் எவரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பிழைக்க முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

38 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0