உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

லசந்த, பிரகீத்தின் விவகாரங்கள் மீண்டும் தூசு தட்டப்படுகின்றன.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் விவகாரங்கள் உள்ளடங்களாக, கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்டிருந்த பாரிய குற்றங்கள் தொடர்பான பழைய கோப்புகள் அனைத்தும் மீண்டும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் வழக்குகள் தற்போது விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இவ்வாறான பல கோப்புகள் மூடி மறைக்கப்பட்டிருந்தன. வெறும் பெயரளவில் மாத்திரமே விசாரணைகள் பற்றி பேசப்பட்டன. இவற்றுக்கு நீதி பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கி சிலர் ஆட்சிப்பீடமும் ஏறினர். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக, 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசு மலர்ந்த போது, இந்த நீதியை நிலைநாட்டுவதற்காகவே மக்கள் மிகப் பாரிய மக்கள் ஆணையை வழங்கியிருந்தனர். 2015 வரை நீடித்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் மீது மக்களுக்கு இருந்த கடுமையான அதிருப்தி மற்றும் கோபத்தின் காரணமாகவே அந்த மக்கள் ஆணை கிடைத்தது. ஏனெனில், அது ஒரு அடக்குமுறை அரசாகவே செயற்பட்டதுடன், மக்கள் பொது வீதிகளில் படுகொலை செய்யப்பட்டனர்.

முக்கியமாக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக உரிமைகள் பற்றி பேசும் அமைப்புகளிடம் நான் இப்போதும் கேட்கின்றேன், உங்களுக்கு அந்தக் கடந்த கால வரலாறு மறந்துவிட்டதா? பட்டப்பகலில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர், சிலர் நாட்டை விட்டு வெளியேறினர், சிலரது கை, கால்கள் உடைக்கப்பட்டன, வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டனர்.

இவற்றுக்குச் சரியான முறையில் நீதியை நிலைநாட்டுவதற்கான மிக நெருக்கமான அதிகார பலம் நல்லாட்சி அரசுக்குக் கிடைத்தது. ஆனால், நல்லாட்சி அரசு அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, பழைய பாதையிலேயே பயணிக்கத் தொடங்கியது.

அதேபோன்று, ஒரு புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கான மிகச் சிறந்த மக்கள் ஆணை நல்லாட்சி அரசுக்கு இருந்தது. ஆனால், அதிலும் அவர்கள் தோல்வியடைந்தனர். இதன் காரணமாக, மிகப்பாரிய சட்ட சீர்திருத்தங்களையும் நல்ல மாற்றங்களையும் கொண்டு வருவதற்கு கிடைத்த பல சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டன.

எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு மிகப் பாரிய பொறுப்பு இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். பல வருடங்கள் பழமையான குற்றங்கள் தொடர்பில் மீண்டும் ஆராய்வது என்பது இலகுவான காரியம் அல்ல. எனினும், இவற்றுக்கான நீதி நிச்சயமாக நிலைநாட்டப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

38 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0