உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் விவரங்களை வெளியிட்டார் என அரசு கூறுவது பொய்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று அரசு குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.” – என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு இதுவரையில் எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விவகாரத்தை அரசு தனது அரசியல் தேவைக்காகவே பயன்படுத்திக் கொள்கின்றது. அப்பட்டமான அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானும் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) அரசியல் பழிவாங்கல்களுக்கே உள்ளாக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையான் பல முக்கிய விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார் என்று ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அண்மையில் தெரிவித்திருந்தனர். ஆனால், நீதிமன்றத்த்துக்கு இதுவரையில் அவ்வாறு எந்தவொரு விடயமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்தக் குண்டுத்தாக்குதல்கள் குறித்து முறையான மற்றும் நடுநிலையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால் அதனை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால், விசாரணைகள் என்ற போர்வையில் தற்போது நாட்டில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகள் மாத்திரமே அரங்கேறி வருகின்றன.

சுரேஷ் சலேவின் கைது மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில், கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி வெளியிட்ட கருத்துக்களை முன்னிலைப்படுத்தி அவரிடம் நான் 10 கேள்விகளைக் கேட்டிருந்தேன். எனினும், அந்தக் கேள்விகளுக்கு இதுவரையில் அவரிடமிருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

38 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0