உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சூழ்நிலையை உணர்ந்து சாப்பிடுகின்றார் சுரேஷ் சலே.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
24 பார்வைகள்

“சுரேஷ் சலே முன்னாள் புலனாய்வு அதிகாரி என்பதால் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் திறன் அவருக்கு இருக்கின்றது. அதன் அடிப்படையிலேயே அவர் உணவை உட்கொள்ள தீர்மானித்துள்ளார். அவர் தரப்பிலிருந்து ஏதேனும் புகார்கள் முன்வைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ஒரு நோயாளி என்ற ரீதியில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினர் தொடர்ச்சியாகவும் அவதானமாகவும் கண்காணித்து வருகின்றனர்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“சுரேஷ் சலே தற்போது உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, வாய் வழியாக உணவை உட்கொள்ள ஆரம்பித்துள்ளார். அவர் உண்ணாவிரதத்தில் இருந்த காலப்பகுதியிலும், அவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவுகள் மூக்கு வழியாகவும், நரம்பு வழியூடான மருத்துவ முறைகள் மூலமாகவும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.

இதனால் அவரது ஊட்டச்சத்து மற்றும் உடல் நலனில் எந்தவொரு குறைபாடும் அல்லது பிரச்சினையும் ஏற்படவில்லை. தற்போது அவர் வழமை போல் வாய் வழியாக உணவை உட்கொள்ளத் தொடங்கியிருப்பது பெரும் வசதியாக அமைந்துள்ளது.

அத்துடன், அவருக்கு ஏற்கனவே கண்டறியப்படாத சில நோய்கள் தற்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டு, அதற்கான உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவர் தரப்பிலிருந்து ஏதேனும் புகார்கள் முன்வைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ஒரு நோயாளி என்ற ரீதியில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினர் தொடர்ச்சியாகவும் அவதானமாகவும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஒரு முன்னாள் புலனாய்வு அதிகாரி என்பதால் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் திறன் அவருக்கு இருக்கின்றது. அதனடிப்படையிலேயே அவர் உணவை உட்கொள்வது போன்ற முடிவுகளை எடுத்துள்ளார்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

38 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0