உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அவசரகாலச் சட்டம் இம்மாதத்துடன் நிறைவு – அரசாங்கம் அறிவிப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்


‘டித்வா’ பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் நடைமுறையிலிருந்த அவசரகாலக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் முடிவுக்கு வருகின்றன.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அரசாங்க ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தினார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“டித்வா’ சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, எதிர்க்கட்சிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே அவசரகால நிலையை நடைமுறைப்படுத்தும் முடிவு ஆரம்பத்தில் எடுக்கப்பட்டது.

இந்த அவசரகாலச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனக் கூறி சில தரப்பினர் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயன்றனர்.

ஆனால், சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை எவ்வித தடையுமின்றி விரைவாக முன்னெடுப்பதற்காக மட்டுமே அரசு இதனை அமுல்படுத்தியது.

இந்தச் சட்டத்தின் மூலம் எந்தவொரு சாதாரண குடிமகனுக்கோ, ஊடகவியலாளருக்கோ அல்லது ஊடக நிறுவனங்களுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று நாம் அன்று உறுதியளித்திருந்தோம்.

நாம் வாக்குறுதி அளித்தபடியே, கடந்த காலங்களில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டுள்ளோம்.” – என்றார்.

அவசரகால அதிகாரங்களை மட்டுப்படுத்துவதில் தற்போதைய நிர்வாகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய அவர், இந்த அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

அத்தோடு, இச்சட்டத்தின் பயன்பாடானது முற்றிலும் தற்காலிகமானது என்றும், பேரிடர் மீட்புப் பணிகளுடன் மட்டுமே அது தொடர்புபட்டிருந்தது என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

38 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0