உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மட்டக்களப்பில் தீப்பரவல் – பல உணவகங்கள் தீக்கிரை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
29 பார்வைகள்

மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள உணவகக் கடைத் தொகுதி ஒன்றில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீப்பரவலில் பல உணவகங்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

அந்தப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திடீரெனப் பற்றிய தீ, அடுத்தடுத்துள்ள ஏனைய கடைகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் படைப் பிரிவினருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், அதற்குள் பல உணவகங்கள் தீக்கிரையாகிப் பெரும் சேதமடைந்துள்ளன.

இந்தத் தீப்பரவலானது மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது குறித்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

41 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0