உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
40 பார்வைகள்

கடுவளை, சுதர்ஷன மாவத்தையில் குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த ஆலை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து, ஆறு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 30, 43, 58, 59 மற்றும் 62 வயதுடைய ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மிஹிந்தலை, மருதானை, வத்தளை, வேபொட தெற்கு, கெத்தலாவ மற்றும் சிப்பிகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

ஆரம்ப விசாரணைகளில், குடிநீர் வணிகம் நடைபெறுவதாக வெளியில் காட்டப்பட்டிருந்த நிலையத்தில், மறைமுகமாக சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெற்று வந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது, 180 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட 18,575 சட்டவிரோத மதுபானப் போத்தல்கள் (மொத்தம் 3,345.5 லீற்றர்), ஒரு லீற்றர் கொள்ளளவு கொண்ட நான்கு போத்தல்கள், 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு போத்தல், மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட எதனோல் மற்றும் உற்பத்தி உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், 50 கிராம் மற்றும் 200 மில்லிகிராம் அளவிலான கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் விற்பனை என்ற போர்வையில் தயாரிக்கப்பட்ட இந்த சட்டவிரோத மதுபானங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

47 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

59 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0