வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு.!
நேற்று (29) காலை 7.00 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் (Shannon) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், தாயைப் பிரிந்திருந்த சிறுத்தை குட்டி ஒன்று உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அதிகாரி ஒருவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அவதானித்த பிரதேசவாசிகள், உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கும் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திற்கும் அறிவித்துள்ளனர்.
தற்போது பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள சிறுத்தை குட்டியின் உடல், மேலதிக விசாரணை மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.