உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கணக்குக் காட்டாத வேட்பாளர்களுக்கு செக்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்

தேர்தல் பிரச்சார செலவீன அறிக்கைகளைச் சட்டபூர்வ காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகளின் தற்போதைய முன்னேற்ற அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க ஊடகங்களிடம் தெரிவித்ததாவது:-
“பிரச்சார செலவீனங்கள் தொடர்பில் நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறித்த விடயம் சார்ந்த சட்ட நடவடிக்கைகள் எந்தளவில் முன்னேற்றமடைந்துள்ளன என்பது குறித்த விவரங்களை ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, அந்தந்த மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு, தற்போது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்த துல்லியமான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கைகள் அனைத்தும் அடுத்த மாதத்துக்குள் தேர்தல் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட விரிவான பிரச்சார செலவீன அறிக்கைகளை வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறியமைக்காகவே நாடு முழுவதும் இவர்களுக்கு எதிராக இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

60 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

60 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

78 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

57 0 0