உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மக்களின் பணத்தைப் பிடுங்கி மக்களுக்கே கொடுக்கும் அரசு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, கடந்த 3 வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியில் மக்களின் உண்மையான வருமானம் எந்த வகையிலும் அதிகரிக்கவில்லை என்றும், மக்களிடமிருந்து வரியாகப் பெறப்படும் பணமே மீண்டும் கொடுப்பனவுகளாக வழங்கப்படுகின்றது என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

கேகாலை மாவட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“அஸ்வெசும, முதியோர் கொடுப்பனவு மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டவை அல்ல. இல்லாத ஒரு நிதியை அல்லது இருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட பணத்தையே அரசு மக்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளது. சுருக்கமாகக் கூறின், உங்களுக்கே வரி விதித்து, அந்தப் பணத்தை உங்களுக்கே திரும்பக் கொடுத்துள்ளார்கள். நாட்டில் புதிய செல்வம் எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதை அரசால் சவாலுக்கு உட்படுத்த முடியாது.

மொத்த தேசிய உற்பத்தி, முதன்மைக் கணக்கு இருப்பு, வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் போன்ற பேரியல் பொருளாதாரம் சார்ந்த கருத்துருக்களைக் காட்டி அரசு தனது பொருளாதாரப் பொய்களை நியாயப்படுத்த முயல்கின்றது. ஆனால், பொருளாதார அறிவியலிலேயே இவை வெறும் தரவுகள் மட்டுமே தவிர, உண்மையான நிலைமை அல்ல என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உண்மையான பொருளாதாரம் என்பது தரவுகளில் இல்லை. அது நிலப்பரப்பிலும், உங்கள் வீடுகளிலும், உங்களின் பைக்கற்றுக்களிலும், நீங்கள் வேலை செய்யும் இடங்களிலுமே காணப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தை ஒரு பெரிய பூதமாகக் காட்டி, மக்கள் மீது விதிக்கக்கூடிய அனைத்து வரிகளையும் விதித்து, அதிகரிக்கக்கூடிய அனைத்துக் கட்டணங்களையும் அரசு அதிகரித்துள்ளது. சுங்க வருமானம் திடீரென அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றார்கள். நாம் பெரிய அளவில் ஏற்றுமதி வணிகத்தை மேம்படுத்தி இந்த வருமானத்தைப் பெறவில்லை, மக்களிடமிருந்தே இது வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொருளாதாரம் முற்றிலும் சுருங்கி, வணிகங்கள் இயங்காமல், மக்களின் கைகளில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தங்களின் ஆட்சியைத் தக்கவைப்பதற்காக மக்களைச் சுரண்டி, தங்களின் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதே இவர்களின் நோக்கமாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

60 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

60 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

78 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

57 0 0