மலையகத்தின் பல பகுதிகளில் தன்சல் நிகழ்வுகள்!
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பகுதிகளில் தான சாலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
மாஸ்கெலிய, நியூ சமன்புரா ஸ்டோர்ஸ் வளாகத்தில் அதன் உரிமையாளரின் ஏற்பாட்டில் ஜஸ்கிரீம் தானசாலை, முன்னெடுக்கப்பட்டது.
இதில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மக்களும் பயன் பெற்றனர்.
இதே போன்று ஹட்டன் நியூ மார்க்கெட் ஃப்ரெண்ட்ஸ் கிளப் ஏற்பாட்டில் பிரைட் ரைஸ் தானசாலை அமைக்கப்பட்டது.
அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல், இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இதில் பலன் பெற்றனர்.