உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

விவாதச் சமரில் யாழ். இந்துவை தோற்கடித்து வட்டு இந்துக் கல்லூரி தேசியத்திற்கு தெரிவு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மாகாண மட்ட விவாதப் போட்டியில் வெற்றி பெற்று முதல் நிலையை அடைந்த வட்டு இந்துக் கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வாரம் இடம்பெற்ற மாகாண மட்ட அறிவிப்பாளர் போட்டியில் வட்டு இந்துக் கல்லூரி மாணவி அருந்தவன் சரணியா முதல் நிலையை அடைந்து தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் இடம்பெற்ற (28.06.2026) மாகாண மட்ட விவாதப் போட்டியானது யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. பல சுற்றுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இறுதிப் போட்டிக்கு வட்டு இந்துக் கல்லூரி எதிர் யாழ். இந்துக் கல்லூரி தெரிவாகியிருந்தது.

பரபரப்பான வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்ற நிலையில் வட்டு இந்துக் கல்லூரி விவாத அணி யாழ். இந்துக் கல்லூரி விவாத அணியை தோற்கடித்து தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்டு இந்துக் கல்லூரி விவாத அணி சார்பில் சந்திரமோகன் ஷைந்தவி,
அருந்தவன் சரணியா,
றுஜிதா ஆனந்தராசா
ஆகியோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

68 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0