உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சம்மாந்துறை கல்வி வலய இணைப்பாளர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
23 பார்வைகள்

சம்மாந்துறை கல்வி வலயத்திற்கான இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் கல்விசாரா உத்தியோகத்தர்களின் கூட்டம் இன்று (29) அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் (தேசிய பாடசாலை) வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, சம்மாந்துறை கல்வி வலயத்திற்கான வலய இணைப்பாளர்களாக எம்.எம். பௌசான் மற்றும் ஏ.எல்.எம். அஷ்ரப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதற்கான நியமனக் கடிதங்களை சங்கத்தின் உப செயலாளர் ஏ.எம். ஜெமில் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட இலங்கை கல்விசாரா ஊழியர் ஒன்றிணைந்த சங்கத்தின் செயலாளர் எம்.ஜே.எம். சஜீத் மற்றும் சம்மாந்துறை கல்வி வலயத்தைச் சேர்ந்த பல கல்விசாரா உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இக்கூட்டத்தில் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள், கல்விசாரா உத்தியோகத்தர்களின் நலன்கள் மற்றும் அமைப்பின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

68 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0