உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கொழும்பு, சஹஸ்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்கஹவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று சஹஸ்புர பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரால் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ள பொலிஸார், அவரது அடையாள விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, உயிரிழந்தவர் சுமார் 55 வயது மதிக்கத்தக்கவர் எனவும், 5 அடி 4 அங்குலம் உயரமுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், அவர் வெள்ளை நிற தலைமுடியைக் கொண்டதுடன், இறக்கும் போது கறுப்பு நிற சட்டை மற்றும் கறுப்பு நிற காற்சட்டை அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமான இந்த மரணம் குறித்து சஹஸ்புர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

68 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0