உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

செம்மணியில் உடைந்த நிலையில் எலும்புக்கூடுகள்: ஆய்வுகளின் பின்னரே உண்மை வெளிவரும் என்கிறார்  சட்டத்தரணி நிரஞ்சன்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
24 பார்வைகள்

“புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து மீண்டும் தோண்டி எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கின்றமை சாதாரணமாகவே கண்களுக்கு தெரிகின்றன. ஆனால் இது தொடர்பான விசாரணைகள் மூலமே உண்மையான முடிவுகளை கூற முடியும்.” – என்று செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

“நேற்றுமுன்தினம் தாடைப்பகுதி உடைந்த நிலையில் உடைந்த தாடை நெஞ்சுப் பகுதியில் காணப்பட்டது. இவ்வாறு பல எலும்புக்கூடுகள் பல பகுதிகளில் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. அது தொடர்பான ஆய்வுகள் எதாவது மேற்கொள்ளப்படுகின்றதா?” என்று  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து உடைந்த நிலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுகின்றமை தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

புதைக்கப்படும்போது எலும்புக்கூடுகள் உடைந்த நிலையில் இருந்தனவா அல்லது பிற்பாடு நடைபெற்ற நிகழ்வுகளால் எலும்புக்கூடுகளில் உடைவுகள் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் ஆய்வுகளின் பின்னரே முழுமையான தகவல்களைப் பெற முடியும்.

செம்மணி மனித புதைப்குழியில் அடையாளம் காணப்படும் எலும்புக்கூடுகள் நேர்சீராக இல்லாமல் இருப்பதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது.

புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து மீண்டும் தோண்டி எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கின்றமை சாதாரணமாகவே கண்களுக்குத் தெரிகின்றன. ஆனால் இது தொடர்பான விசாரணைகள் மூலமே உண்மையான முடிவுகளைக் கூற முடியும்

மேலும் செம்மணி மனிதப் புதைகுழியை நீதி அமைச்சர் ஹர்ஷன  நாணயக்கார பார்வையிடவுள்ளார் என்று ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். ஆனால் இன்னமும் நீதிமன்றத்திடம் அதற்கான விண்ணப்பம் செய்யப்படவில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

65 0 0