உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

முஸ்லிம்களின் தேவைகளை தன் தேவையாக சுமப்பவனே முஸ்லிம்களுக்கு தலைமை தாங்க தகுதி பெறுகிறான்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
19 பார்வைகள்

முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு தேவைகளையும் தன் தேவையாக நினைத்து முழுமையாக சுமப்பவனே முஸ்லிம்களுக்கு தலைமை தாங்க தகுதி பெறுகிறான் என்று தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபகரும், நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகருமான சமூக சேவகர் பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கள நிலவரம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து கருத்து தெரிவித்த பொறியியலாளர் நாபீர் தொடர்ந்தும் அவரது கருத்தினை குறிப்பிடும் போது,

முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களில் மர்ஹூம் அஷ்ரப் தனித்துவ அரசியலுக்கு வித்திட்டாலும் ஆட்சியாளர்களை தீர்மானித்தல், பங்கெடுத்தல் என பல்வேறு கட்டங்களில் முஸ்லிம்களை தனித்துவ அடையாளமாக காட்டி பல்வேறு வெற்றிகளைக் கண்டார்.

ஆனால் பின் வந்த தலைவர்கள் தலைமைத்துவ போட்டியினாலும், சுயநல அரசியல் சிந்தனைகளாலும் முஸ்லிம் சமூகத்தை அடகு வைத்த நிலையினால் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து வருகிறோம்.

நாம் எவ்வளவு பலமாக இருந்தாலும் ஆட்சியாளர்களுடன் ஒன்றித்து பயணிப்பதன் ஊடாகவே சிறுபான்மை சமூக நலன்களை காத்துக் கொள்ள முடியும்.

அந்த அடிப்படையில் Npp அரசாங்கம் நாட்டிற்கு உகந்த பல சேவைகளை செய்துவருகிறது. சர்வேதேச யுத்த நிலை, உலகலாவிய ரீதியில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில அசௌகரியங்களை எமது நாட்டு மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். என்றாலும் ஜனாதிபதி அநுரவினால் நாட்டை ஸ்திரதன்மைக்கு எதிர்காலத்தில் கொண்டு செல்ல முடியும். இலஞ்ச ஊழல் மற்றும் போதைவஸ்து ஒழிப்பு என நாட்டை சூரையாடும் குட்டிச்சுவராக்கும் நிலையை முறியடித்து, வெற்றி கொண்டு வருவதே நாட்டு மக்களுக்கு கிடைத்த
பெரும் வெற்றியாகும்.

படிப்படியாக பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட எஞ்சிய காலத்தை Npp அரசாங்கம் பயன்படுத்தும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

எனவே, அரசின் நல்ல செயற்றிட்டங்களுக்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பை வழங்க முன் வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

41 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

62 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

67 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

58 0 0