உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மண்திட்டுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் மண்திட்டுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளது.

அத்துடன் கொழும்பு – ஹட்டன், ஹட்டன் – கண்டி, ஹட்டன் – நுவரெலியா பிரதான சாலையில் அதிகளவில் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக மண் திட்டுகள் சரிந்து விழுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. மவுசாகலை, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர, மேல் கொத்மலை, காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர் அதன் கொள்ளளவை எட்டிய வண்ணம் உள்ளது.

கன மழை பெய்து வருவதால் விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0