உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

“கிழக்கின் ஊடக முதுசொம்” ஏ.எல்.எம். சலீமுக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நினைவேந்தல் நிகழ்வு

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கிழக்கின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ் – முஸ்லிம் உறவுகளின் இணைப்புப் பாலமுமாகத் திகழ்ந்த மறைந்த ஏ.எல்.எம். சலீமின் நினைவேந்தல் மற்றும் நூல் வெளியீட்டு விழா நேற்று  சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், சலீமின் 60 ஆண்டுகால ஊடகப் பயணத்தை விவரிக்கும் 160 பக்கங்கள் கொண்ட நினைவு மலர் வெளியிடப்பட்டது. சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் தொகுத்த இந்நூலில், பேராசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் என 37 பேர் சலீமுடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.

நினைவுப் பேருரைகளை நிகழ்த்திய பிரமுகர்கள் சலீமின் அர்ப்பணிப்பை இவ்வாறு நினைவு கூர்ந்தனர். 17 வயதில் நிருபராகப் பயணத்தைத் தொடங்கிய சலீம், செய்திகளுக்காகப் பல மைல்கள் பயணித்து உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

“இன்று இந்தச் செய்தி வரும், பக்கம் ஒதுக்கி வையுங்கள்” என முன்கூட்டியே ஆசிரியர்களிடம் உரிமையோடு கூறும் அளவுக்குப் பத்திரிகைத் துறையில் செல்வாக்கு பெற்றிருந்தார். யுத்த காலத்திலும், மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் போன்ற அரசியல் தலைவர்களுடனும் மிக நெருக்கமாகவும் நேர்மையாகவும் பணியாற்றி, இன ஐக்கியத்துக்காக உழைத்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அடுத்த ஊடக விருது வழங்கலின் போது, சலீமின் பெயரில் விசேட விருது ஒன்றை வழங்குவதற்குத் தான் அனுசரணை வழங்குவதாகப் பகிரங்கமாக உறுதியளித்தார்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீகஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், இரா. சாணக்கியன், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான வீ.தனபாலசிங்கம், எம்.பி.எம். பைருஸ், தேவ கௌரி, ஆனந்த பாலக்கிட்னர், பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மற்றும் சலீமின் புதல்வர் அகீல் சலீம் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

“தன்னை ஒரு பெரிய ஊடகவியலாளர் என்று சொல்வதை விட, ஒரு சாதாரண பத்திரிகை நிருபர் என்று அழைப்பதையே சலீம் எப்போதும் விரும்பினார்” எனப் பேச்சாளர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

3 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

68 0 0