உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இரு சகோதரர்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி மரணம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கண்டி, தெல்தெனிய பகுதியில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தெல்தெனிய, பம்பரகல கோயிலுக்கு அருகாமையில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கப் பகுதிக்கு இன்று நான்கு இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர். இதன் போது, எதிர்பாராத விதமாக இளைஞர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். அங்கிருந்தவர்களின் முயற்சியால் ஒரு இளைஞர் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரும் நீருக்குள் மறைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, நீரில் மூழ்கிய மூவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் 18 முதல் 21 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் பெரும் சோகமாக, உயிரிழந்த மூவரில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஆழமான மற்றும் அபாயகரமான பகுதிகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் தொடர்ச்சியாக எச்சரித்து வரும் நிலையில், இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

3 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

68 0 0