உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மணற்காட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கிழக்கு மணற்காட்டு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று காலை 10:30 மணியளவில் மணற்காட்டு பாடசாலை முன்பாக உணர்வு ரீதியாக இடம்பெற்றது

குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் மணற்காட்டு பங்குத்தந்தை அவர்களால் விசேட வழிபாடு ஒன்று வழங்கப்பட்டது. பின்னர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இறுதிப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கும், உறவுகளுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டு தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றது. அதனை தொடர்ந்து தமிழின படுகொலையை ஞாபகப்படுத்தும் முகமாக உப்பு கஞ்சி வழங்கப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மத குருமார்கள், புலம்பெயர் மக்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் மற்றும் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயகோபி மற்றும் குடத்தனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரெஜி என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

36 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

68 0 0