உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழில் பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு – கிழக்கு எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

மானிப்பாய் பிரதேச சபையின் முன்றல், சங்கானை மற்றும் அராலி ஆகிய பகுதிகளில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது இறுதிப் போரில் யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் அவலத்தின் குறியீடான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைத் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான உறவுகளின் தியாகங்களை நினைவுகூரும் வகையில், இந்த நினைவேந்தல் வாரம் தமிழர் தாயகப்பகுதிகளின் பல்வேறு இடங்களிலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

65 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0