உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மஹிந்தவின் உயிருக்கு ஆபத்து; பதறுகின்றார் மனோஜ் கமகே.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்குத் தற்போதைய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.” – என்று அவரது ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சமீபத்தில் மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்தபோது, முறையான உடற்பரிசோதனைகள் இன்றி பெருமளவிலான மக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். அந்தக் கூட்டத்துக்குள் ஒரு பயங்கரவாதி ஊடுருவியிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்?

இறுதிப் போரின் நினைவேந்தல் நடைபெறும் இக்காலகட்டத்தில், சில குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க முயற்சி செய்யலாம். எனவே, அரசு இந்த விடயத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.” – என்றார்.

புதிய அரசு பதவியேற்ற பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமையைக் கடுமையாகச் சாடிய அவர், இது திட்டமிட்ட ஒரு புறக்கணிப்பா என்ற ஐயத்தையும் எழுப்பியுள்ளார்.

நாட்டின் தற்போதைய மர்ம மரணங்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான சம்பவங்களுக்கு மத்தியில், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு மட்டுமன்றி, தனது சொந்தப் பாதுகாப்பு குறித்தும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் மனோஜ் கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

69 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0