உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வாகன வரி விவகாரத்தில் அரசை விளாசும் சஜித்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

“விட்ஸ் கார் ஒன்றை 1.2 மில்லியன் ரூபாவுக்குத் தருவோம் என்று மேடைகளில் முழங்கிய ஆட்சியாளர்கள், இன்று வாகனங்கள் மீது மேலதிகமாக 50 சதவீத வரியைச் சுமத்தி மக்களை வஞ்சித்துள்ளனர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமவில் மாகம மஹாநாம தேரரை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அரசின் பொருளாதாரக் கொள்கைகளைச் சரமாரியாகக் குற்றஞ்சாட்டினார்.

வரி அதிகரித்தாலும் வாகனங்களின் விலை உயராது என நிதிப் பிரதி அமைச்சர் கூறுவது வேடிக்கையானது என்று சாடிய சஜித், இவ்வாறான முட்டாள்தனமான கருத்துக்களைக் கூறுவதை விடுத்து, மக்களின் கோணத்திலிருந்து பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசு பழக வேண்டும் என்றார்.

இந்தநிலைக்கு ஜனாதிபதி, அரசு மற்றும் அதற்குத் துணையாக இருக்கும் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மிக வேகமாகச் சரிந்து வருவது குறித்து அவர் கவலை வெளியிட்டார்.

“ரூபாவின் வீழ்ச்சி பணவீக்கத்தைத் தூண்டி, அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தும். இது சாதாரண குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.

ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு அடிப்படைப் பொருளாதார அறிவு கூட இல்லை. ஏற்றுமதி வருமானம், சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமே ரூபாவைக் கட்டுப்படுத்த முடியும். அதை விடுத்து மக்களை வரிச்சுமைக்குள் தள்ளுவது பாரிய பிழை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“சர்வதேச மோதல்களால் ஏற்படும் பொருளாதார அழுத்தங்களை அரசு முன்கூட்டியே கணிக்கத் தவறிவிட்டது. தற்போதைய சூழலில் மக்களுக்கு வழங்க வேண்டிய மானியங்களை மற்றும் நிவாரணங்களை அதிகரிக்க வேண்டுமே தவிர, அதைக் குறைக்கக் கூடாது.” – என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

69 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0