உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு காரைதீவு பிரதேச சபையின் அமர்வில் அஞ்சலி!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் பதினொராவது அமர்வு நேற்று காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற போதே இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

அவர் தலைமை உரையாற்றுகையில் முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்பாக உரையாற்றி மௌன அஞ்சலிக்கு வேண்டுகோள் விடுத்தார். அதனையேற்று அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

அங்கு தவிசாளர் சு.பாஸ்கரன்  தலைமைமையுரையாற்றுகையில்,

“இந்த வாரம் எமது ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை வாரமாகக் காணப்படுகின்றது. இலங்கையிலே  எண்ணிக்கை அடிப்படையில் தமிழர்கள் சிறுபான்மையினராக காணப்பட்டாலும் அவர்களை அடக்கி ஒடுக்கி கடந்த அரசுகள் ஆட்சிகள் செய்து வந்தன.

இன்று ஒரு சிறந்த ஆட்சியாக காணப்படுகிறது என்று கருதப்பட்டால் உண்மையாக இந்த அரசாங்கம் சிறுபான்மை இனங்களான தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வு திட்டத்தை வடக்கு – கிழக்குக்கு முன்வைக்க வேண்டும். அந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இறந்த ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்றால்  அவர்களுக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும். மேலும் புலம்பெயர் உறவுகள் இந்த யுத்தத்தில் ஊனமுற்றவர்களுக்கு உதவ வேண்டும்.”  – என்றார்.

உப தவிசாளர் எம் எச் எம். இஸ்மாயில் பேசுகையில்,

“அண்மையில் சாய்ந்தமருதுக்கான நகர சபை தீர்மானம் உயர் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. தற்பொழுது எல்லை நிர்ணயம் செய்யப்படும் வேலை ஆரம்பமாக இருக்கின்றது.

இந்த நேரத்தில் சாய்ந்தமருதின் தென் புற எல்லையாகிய காரைதீவு பிரதேச சபையின் எல்லைகள் தீர்க்கமாக வரையறுக்கப்பட வேண்டும். எந்த இடத்தில் இந்த, அந்த, தென்புற எல்லை இருக்கின்றன என்பதனை தவிசாளர் அறிவிக்க வேண்டும்.

 கடந்த வாரம் ஆர்.கே.எம். வீதியில் டெங்கு நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டிருக்கின்றார். இதனை மேலும் பரவாமல் தடுப்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும்.” – என்றார்.சுமார் அரை மணி நேரத்தில் இந்த 11 ஆவது அமர்வு நிறைவுற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

69 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0