உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மாணவர்களுடன் மோதல் இல்லை;அமைதி வழியில் தீர்வு காண்போம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

“மல்வானையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ள வீடு தொடர்பான பிரச்சினையை, மாணவர்களுடன் மோதலுக்குச் செல்லாமல் அமைதியான முறையில் தீர்க்கவே அரசு விரும்புகின்றது” என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

அரச சொத்தாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, எவராலும் உரிமை கோரப்படாமல் இருந்த மல்வானை வீட்டை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கைப்பற்றியுள்ளமை குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மல்வானை வீட்டை அருகில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் பயன்பாட்டிற்கு வழங்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீண்டகாலமாக இருக்கும் விடுதிப் பிரச்சினை மற்றும் இடப்பற்றாக்குறையை நாம் உணர்ந்துள்ளோம்.

இது தொடர்பாகக் கல்வி அமைச்சு மற்றும் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி விரைவில் சுமுகமான தீர்வு எட்டப்படும். இந்தச் சம்பவத்தை வைத்து அரசின் மீது சேறு பூச எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமமானவர்களே என ஜனாதிபதி தெளிவாகக் கூறியுள்ளார்.

நிலக்கரி கொள்வனவு அல்லது கொள்கலன் விடுவிப்பு தொடர்பான விசாரணைகளுக்குத் தேவைப்பட்டால், சாட்சி சொல்ல ஜனாதிபதி நேரில் செல்லவும் தயங்கமாட்டார். எதிர்க்கட்சியினர் வீணாகப் பொய்களைப் பரப்பாமல், புகார்கள் ஏதேனும் இருந்தால் தாராளமாக விசாரணை ஆணைக்குழுக்களிடம் முறையிடலாம்.

எதிர்க்கட்சிகளின் அரசியல் கோஷங்களுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அரசு செயற்படாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

69 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0