உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வனவாஸல – ஹூணுபிட்டிய இடையே ரயில் தடம் புரண்டு விபத்து ; 12 பயணிகள் காயம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

பொல்கஹ வெலையிலிருந்து தெற்கு களுத்துறை நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் இன்று 16 ஆம் திகதி அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ரயிலின் பெட்டி யொன்று தண்டவாளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்ததில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 3:25 மணிக்கு பொல்கஹவெலையிலிருந்து புறப்பட்ட இந்த ரயில், வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே வந்துகொண்டிருந்த போதே திடீரென தடம் புரண்டுள்ளது.

விபத்தின் வீரியம் காரணமாக ரயிலின் ஒரு பெட்டி முற்றாகக் கவிழ்ந்துள்ளது. ரயில் தடம் புரண்ட போது , அதிலிருந்த பயணி ஒருவர் பெட்டிக்கு வெளியில் தூக்கி வீசப்பட்ட நிலையில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கும் இடையில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 12 பயணிகளும் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் மிகவும் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து காரணமாகக் கீழ் ரயில் மார்க்கத்திலான (Down Track) போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், மேல் ரயில் மார்க்கம் (Up Track) மற்றும் மூன்றாவது ரயில் மார்க்கம் ஆகியவற்றினூடாக ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருவதாகச் சம்பவ இடத்தில் இருந்த ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது ரயில்வே திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதோடு, கவிழ்ந்த ரயில் பெட்டியை அகற்றும் பணிகளையும் விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

70 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0