உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளுக்கு ஆதம்பாவா எம்.பியின் ஒத்துழைப்பைப் பெற ; பள்ளிவாசல் முன்னிற்க வேண்டும்!!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் பணிகளை ஜனாதிபதி ஊடாக துரிதப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் முன்னிற்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்றை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் நிறைவேற்றியுள்ளது.

சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் புதன்கிழமை (13) இரவு அதன் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ் எம்.எம். அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது நகர சபைக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன் இரு மாத காலத்தினுள் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு, அதனை வர்த்தமானியில் பிரசுரிக்குமாறும் அதன் பின்னர் தேர்தலை நடத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இதனை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதற்கும் அதன் பிரகாரம் சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிப்பதற்கும் அதற்கான கட்டிட வசதிகள் மற்றும் ஆளணி உள்ளிட்ட பௌதீக வளங்களை ஏற்படுத்துவதற்கும் நிர்வாக செயற்பாடுகள் மற்றும் சேவைகளை ஆரம்பிப்பதற்கும் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

இந்த விடயங்களை மத்திய அரசின் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சபை என்பனவே செயற்படுத்த வேண்டிய பொறுப்புடமையைக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் ஊடாகவே நிறைவேற்ற வேண்டியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கரிசணையுடனான துரித நடவடிக்கைகளை சாத்தியப்படுத்த வேண்டுமாயின் இந்த மண்ணின் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினராகவும் ஜனாதிபதி அநுரவின் நெறுங்கிய தோழராகவும் திகழ்கின்ற அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. எனவே இந்த விடயத்தில் அவர் முழு மூச்சுடன் ஈடுபடுவதற்கு ஊர் சமூகத்தினரால் ஊக்கமளிக்கப்பட வேண்டும்.

ஆகையினால் இந்த விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களை முன்னிலைப்படுத்தி, செயற்படுவதற்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் இடைக்கால நிர்வாக சபை அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும் என்று சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாய்ந்தமருது நகர சபைக்கான முதலாவது தேர்தலானது, சபை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னரே நடத்தப்படும். தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டு, போதிய கால அவகாசம் வழங்கப்பட்டே தேர்தல் நடைபெறும் என்பதால் இப்போதே தேர்தலை முன்னிலைப்படுத்தி, வரிந்து கட்டிக் கொண்டு செயற்படுவதற்கு எந்த அவசரமும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, முதலில் சபையை வெற்றிகரமாக ஸ்தாபிப்பதற்கும் அதற்கான வளங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்குமான செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிவாசல் தலைமையில் ஒன்றிணைந்து செயற்பட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் எனவும் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

71 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0