உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

செம்பியன்பற்று பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து விசேட அறிவித்தல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களிடம் இருந்து புனித பிலிப்பு நேரியார் வருடாந்த ஆலய திருவிழா சம்பந்தமாக விசேட அறிவித்தல் ஒன்று விடுவிக்கபட்டுள்ளது.

குறித்த அறிவித்தலில்,
செம்பியன்பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பெருவிழா எதிர்வரும் மே மாதம் விமர்சையாக நடைபெறவுள்ளது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தையும், பங்கு மக்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

திருவிழாவிற்கான முக்கிய வழிபாடுகளான கொடியேற்றம்:- எதிர்வரும் 17.05.2026 அன்று மாலை 5.00 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா திருப்பலி ஆரம்பமாகும்.

நற்கருணை விழா:- 25.05.2026 அன்று மாலை 5:00 மணியளவில் நற்கருணை பவனி மற்றும் வழிபாடுகள் இடம்பெறும்.

திருவிழா கூட்டுத்திருப்பலி:- 26.05.2026 அன்று காலை 6.30 மணியளவில், வட மாகாண முதல்வர் அடிகளார் அருட்பணி ஜெயந்தன் பச்சேக் அமலரித்தியாகிகள் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களிலிருந்து விசேட பேருந்து போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

திருவிழா மேடைகளுக்கான வியாபாரப் பதிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும். வர்த்தகப் பிரிவினர் தொடர்புகளுக்கு 0771748741 என்ற இலக்கத்தைப் பயன்படுத்தலாம்.

திருவிழா அன்று மாலை, ஆலய முன்றலில் “யுவானியர் தென் மோடி நாட்டுக்கூத்து” கலை நிகழ்வு அரங்கேற்றப்படும்.

புனிதரின் ஆசியைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பங்குத்தந்தையும் பங்கு மக்களும் அனைத்து இறைமக்களையும் அன்புடன் அழைக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0