உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிகை அலங்கார கடை உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (15.05.2026) புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு கலந்துரையாடல் ஆரம்பமானது.

குறித்த கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களுக்கு முடி வெட்டுவது தொடர்பாகவும், சமூகத்தில் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும், அழகக சங்க உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகளும் கலந்துரையாடல் மூலம் எட்டப்பட்டிருந்து.

அழகக உரிமையாளர்கள் பாடசாலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு தலைமுடி வெட்டுவது தொடர்பாக ஏற்றுக்கொள்வதாக உடன்பட்டிருந்ததுடன், பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்வதாக அதிபர்களால் இதன்போது கூறப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் விஸ்வலிங்கம் விஷ்ணுகரன், முல்லைத்தீவு மாவட்ட அழகக கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வெ.றொபின்சன், புதுக்குடியிருப்பு பிரதேச அழகக சங்கத்தின் தலைவர் ம.யோகதாஸ், அழகக சங்கங்களின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சிகை அலங்கார கடை உரிமையாளர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0